கோவை வெஸ்டர்ன் ரிங் ரோடு பணியில் ராயல்டி ரூ.30 கோடி மோசடியா…?!
கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.80 கி.மீ தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை (வெஸ்டர்ன் ரிங் ரோடு) அமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பைபாஸ் ரோடு போடப்பட்டதில் விதிமுறை மீறல் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ரோடு போடும் போது கிராவல் மண் எடுத்தால் ஒரு டன்னிற்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் என ராயல்டி தொகை (சீனரேஜ் கட்டணம்) செலுத்த வேண்டும். ஆனால் இந்த கட்டணத்தை கனிம வளம் மற்றும் புவியியல்…
