திமுக திட்டங்களை காப்பியடிக்கிறதா தவெக…
திமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை தமிழக வெற்றி கழகம் அப்படியே காப்பியடித்து பெயரை மாற்றி செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. பழைய திட்டத்தை அதே பெயரில் அப்படியே செயல்படுத்தினால் தங்களுக்கு எந்த பெயரும் கிடைக்காது என தமிழக வெற்றி கழகத்தினர் பெயரை மாற்றி பழைய திட்டங்களை காப்பியடிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 2 மாதம் முன் நடந்த ஜமாபந்தியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்களை பெற்றனர். இந்த மனுக்களுக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. குறிப்பாக பொதுமக்கள் ஏழை எளிய மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாமல் |நிராகரிக்கப்பட்டது.
மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து எந்த பதிலும் தராத நிலையில் தற்போது உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடத்தி அதே போல் தொடர்ந்து மனுக்களை வாங்கி குவித்து வருகிறார்கள். தொடர்ந்து மனுக்கள் வாங்கி என்ன தீர்வு கிடைக்கும். கடந்த காலத்தில் தந்த மனுக்கள், இப்போது வழங்கும் மனுக்களுக்கு எப்போது தான் தீர்வு காண்பீர்கள் என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தாலுகா வாரியாக பல ஆயிரம் புகார் மனுக்களுக்கு தீர்வு காணாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு முறையாக தீர்வு காணவில்லை. புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள்.
இதேபோல் ஜாதி சான்றிதழ் கேட்டும் அதிக விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. மகளிர்
உரிமைத்துறைக்கான விண்ணப்பங்களும் பல ஆயிரம் குவிந்துள்ளது. இவற்றையெல்லாம் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை. தொடர்ந்து புகார் மனு பெறும் அதிகாரிகள் அதற்கு தீர்வு காண தீவிரம் காட்ட வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
