அண்ணாமலை அடுத்த பிளான்: திமுக வட்டாரத்தில் திகைப்பு…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது.
இதில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போகிறது.

தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் தேர்தல் குழுவின் இணைச

பொறுப்பாளராக மத்திய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் நியமிக்கப்பட்டுள்ளார் .

இவர் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு வழங்கினர்.

பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் அர்ஜுன் ராம் மேக்வால் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று காளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு உள்விளையாட்டு அரங்கில்
அண்ணாமலை மற்றும் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் பேட்மின்டன் விளையாடினர். அப்போது கட்சி முக்கிய நிர்வாகிகள் வேடிக்கை பார்க்க குவிந்தனர்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா போட்டியிடும் தொகுதிகளில் கள ஆய்வு செய்து வெற்றிக்கான திட்டங்களை வகுக்க மத்திய அமைச்சர் வந்திருப்பதாக தெரிகிறது . எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் கட்சிக்காக வேலை செய்வேன் எனக் கூறி அண்ணாமலையும் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளார்.


தேர்தல் பின்னணி பணிகளை செய்து வருகிறார். அண்ணாமலை போட்டியிடாமல் பின்னணியில் பணிகளை மட்டும் செய்வது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை பரபரப்பு அடைய செய்திருக்கிறது.

அவர் இந்த தேர்தலில் என்ன செய்யப் போகிறார். கட்சியினரை வெற்றி பெற வைப்பாரா பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபடுவாரா என யாருக்கும் எதுவும் தெரியாத நிலைமை இருக்கிறது.


இதுவரை நடந்த கூட்டங்களில் அவர் திமுக ஆட்சி காலத்தில் நடந்த கொலை கொள்ளை கற்பழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த ஆதாரங்களும் பேச்சுக்களும் திமுக தரப்பினருக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

இதே பாணியில் பேசினால் திமுக எதிர்ப்பு அலை கடுமையாக உருவாகும் என பாஜக கருதுகிறது. இந்த இலக்கை நோக்கி அண்ணாமலை தீவிரமாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *