New born child death : ரோட்டில் வீசப்பட்டு இறந்து கிடந்த 5 மாத ஆண் குழந்தை…
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருபவர் கலைவாணி (30). இவர் இன்று பணியில் இருந்தபோது, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் போன் செய்துள்ளார்.
அவர் பழையூர் நியூ சித்ராம்பலம் லே-அவுட், பகுதியில் சாலையோரத்தில் ஒரு குழந்தை சடலமாக கிடப்பதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சுமார் 5 மாத ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தார்.
அவரது புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடல் எப்படி அங்கு வந்தது யாராவது குழந்தையைக் கடத்தி வந்து கொன்று போட்டுவிட்டுச் சென்றார்களா கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்த குழந்தை கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கைள தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
