Illegal affair:தொழிலாளி அடித்து கொலை செய்து சடலத்தை ரோட்டில் வீசிய கொடூரம்…

கோவை வேலாண்டிபாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (40). இவர் கூலிக்கு ஆள் பிடித்து விடும் புரோக்கர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் கூலி முக்கு அருகே வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்காக அனுப்பி வந்தார்.

மணிக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். மணி கட்டிட வேலைக்கு பெயர் விவரம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரை வேலைக்கு அனுப்பினார். அந்த நபர் அடுத்த நாள் வேலை கேட்டு மணியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மணியின் இரண்டாவது மனைவியிடம் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அவரை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்துள்ளதாக தெரிகிறது. இதை பார்த்து மணி கோபம் அடைந்த மணி இனி இதுபோல் செய்யக்கூடாது என மிரட்டி எச்சரித்து அனுப்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு மணி அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று மது வாங்கி குடித்தார். பின்னர் வீட்டுக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டட வேலைக்கு வந்த அதே நபர் மணியின் வீட்டுக்குள் நைசாக புகுந்தார் அவர் மணியின் இரண்டாவது மனைவியுடன் உல்லாச லீலையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்த மணி எழுந்து பார்த்தபோது தனது மனைவி வேறொரு நபருடன் இருப்பதை அறிந்து கோபம் அடைந்தார். அவர் தனது வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அந்த நபரின் தலையில் தாக்கினார். தொடர்ந்த அவர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் அதே இடத்தில் இறந்து விட்டார் .

பின்னர் மணி இறந்த நபரின் சடலத்தை இழுத்துச் சென்று ரோட்டின் ஓரமாக வீசி விட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரமாக இருந்ததால் யாரும் இதை கவனிக்கவில்லை. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ரோட்டில் சடலம் கிடப்பதை பார்த்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கே சென்று சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் . இதில் மணி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது . அவரை போலீசார் கைது செய்தனர் . இறந்த நபர் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளதாக தெரிகிறது. அவரைப் பற்றிய விவரங்கள் வேறு எதுவும் கிடைக்கவில்லை.

அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மனைவியுடன் உல்லாச நிலையில் ஈடுபட்ட வாலிபரை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *