இடிந்து விழும் அபாயத்தில் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட்…!
கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட 35 கோடி நிதி வழங்காமல் முடக்கப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரத்தில் மத்திய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் 3.5 ஏக்கரில் அமைந்துள்ளது. ஈரோடு திருப்பூர் சத்தியமங்கலம் சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் 998 பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் சென்று வருகின்றன. இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமாகிவிட்டது. கடந்த 1951ம் ஆண்டில் இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டடம், கூரை, கழிவறை, பார்க்கிங் வளாகம் தபால் அலுவலகம், ஓய்வறை, வணிக கட்டடம், தங்கும் கூடம் என அனைத்தும் பழுதாகிவிட்டது.
இதனை இடித்துவிட்டு 35 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கடந்த ஆண்டு இதற்கான அனுமதி, நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி ஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 70 பஸ்கள் நிறுத்தும் வகையில் ரேக் மற்றும் நான்கு மாடியில் பஸ் ஸ்டாண்ட் திட்டம் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கண்காணிப்பு அறை லாக்கர் ரூம் பாலூட்டும் அறை, ஓய்வரை வணிக கடைகள் என பல்வேறு திட்டங்கள் 2014 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி போன்றவையும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இடம் போதுமானதாக இருக்குமா?, மாற்று இடம் தயார் செய்ய வேண்டுமா? என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் காரணமாக திட்டம் தாமதம் ஆகி வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் கட்டிடம் இடிக்கப்பட்டால் தற்காலிகமாக மத்திய சிறைச்சாலை பகுதியில் தனி வளாகம் அமைத்து அங்கே இருந்து பஸ்களை இயக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் மிகவும் மோசமாக இருக்கிறது. கழிவறை மட்டுமல்ல பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாத நிலைமை இருக்கிறது. மேலும் கட்டடத்தின் மேல் கூரை சிதலமாகி கீழே உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இங்கே இருக்கும் வணிக கட்டடங்கள் பெரும்பாலானவை
சீரமைக்காமல் ஆபத்தானது இருக்கிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் பொது மக்கள் உட்காரும் நாற்காலி கூட இங்கே பாதுகாப்பாக இல்லை. இருசக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இந்த நெருக்கடியில் அசுத்தமான சூழ்நிலையில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுவது சரியல்ல” என்றனர்.
