காலியாகும் தனியார் பஸ்கள்… அரசு பஸ்களில் அமோக கூட்டம்
தமிழக வெற்றிக்கழக அரசின் வெற்றிப் பயணம் திட்டம் கடந்த 2.10.2026 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாநகர, நகரப்புற சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி சேவை பஸ்களில் மகளிர சிறுமியர் மற்றும் திருநர் பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இத்திட்டத்தில் பயனடைவதற்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை, பயணங்களின் எண்ணிக்கைக்கும் வரம்பில்லை.
இத்திட்டத்தை எளிமையாகவும், ஒரே மாதிரியான நடைமுறையிலும் செயல்படுத்துவதற்காக நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவில் இந்த திட்டத்தில் 12,692 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்த அரசு பஸ்களில் 69 சதவீத பஸ்கள் வெற்றி பயணம் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. தினமும் 84.32 லட்சம் பெண். திறநங்கை பயணிகள் இதில் பயன்பெறுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தினமும் 1,65,312 டிரிப் வெற்றி பயணம் பஸ்கள் இயக்கப்படுகிறது. வாரம் 5.9 கோடிக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. டிஜிட்டல் வழித்தட பலகை உள்ள பேருந்துகளில் வெற்றிப் பயணம் என தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் வழித்தட பலகை இல்லாத பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிப் பயணம் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட வேண்டும்
ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு திட்டத்தின் தகுதி, ஜீரோ டிக்கெட் வழங்கும் முறை, பயணிகள் சேவை மற்றும் புகார் கையாளும் நடைமுறை குறித்து பணிமனை அளவில் முன்கூட்டியே விளக்கக் கூட்டம் நடத்த வேண்டும். மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது,
ஒவ்வொரு தகுதியான பயணத்திற்கும் டிக்கெட் தர வேண்டும். ஜீரோ டிக்கெட் இல்லாத தகுதியான பயணியிடமிருந்து அபராதம வசூலிக்கக் கூடாது சேவைகளில் பயணியின் ஏறும் இடமும் இறங்கும் இடமும் தமிழ்நாட்டிற்குள் இருந்தால் மட்டுமே ஜீரோ டிக்கெட் வழங்க வேண்டும். வழித்தடம் இடையில் அண்டை மாநிலம் / யூனியன் பிரதேசம் வழியாகச் சென்றாலும் இச்சலுகை தொடறாம். பயணியின் ஏறும் இடம் அல்லது இறங்கும் இடம் அண்டை மாநிலம் / யூனியன பிரதேசத்தில் இருந்தால் நடைமுறையிலுள்ள கட்டண டிக்கெட் வழங்க வேண்டும்.
இதற்கேற்ப மென்பொருள் அமைப்பில தேவையான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். க்கிய பேருந்து நிலையங்கள், கலவி நிறுவனங்கள், தொழிற்பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கள கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நெரிசல், நீண்ட காத்திருப்பு, தாமதம் மற்றும் சேவை குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாகத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேர அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக ஏறவும் இறங்கவும் போதுமான நேரம் வழங்கப்பட வேண்டும். அனைத்து வெற்றிப் பயணம் பேருந்துகளும் நல்ல பராமரிப்பு மற்றும் இயக்கத் தகுதி நிலையில் இருக்க வேண்டும்.
தேவையான ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மற்றும் மாற்றுப் பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்படவேண்டும் வெற்றிப் பயணம் தொடர்பான புகார்கள் எண் 149 மூலம் தனியாகப் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துக் கழகம் / மண்டலம் / கிளை வாரியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பயணம் திட்டம் வந்த பின்னர் பல ஆயிரம் தனியார் பஸ்கள், ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனியார் பஸ்களில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு பெண் பயணிகள் தான் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்தனர்.
இவர்கள் அனைவரும் வெற்றி பயண பஸ்களை பயன்படுத்துவதால் தனியார் பஸ்கள் ஏறக்குறைய காலியாகி விட்டது. சில ஆண் பயணிகள், ரூட்டில் பஸ் இல்லாத நிலையில் சில பெண் பயணிகள் தான் தனியார் பஸ்களில் ஏறுகின்றனர். தனியார் பஸ்கள் காத்திருந்து பயணிகளை கூவி கூவி அழைத்தாலும் யாரும் வருவதில்லை.
ஊர் பெயரை சொல்லி கத்தி கத்தி கண்டக்டர்கள் ஏமாற்றமடைந்து விட்டனர். தங்களுக்கு எந்த மாற்று திட்டமும், சலுகையும் அரசு அறிவிக்கவில்லை. மொத்தமாக தனியார் பஸ் போக்குவரத்து முடங்கி போய விட்டது. கலெகசன் இல்லாததால் பேடடா கிடைக்கவில்லை. டீ காசு கூட கிடைக்காமல் கவலையில் இருப்பதால் டிரைவர் கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.
வெற்றி பயணம திட்டம் உருவாக்கும் போது தனியார் பஸ்கள் நிலை குறித்து அரசு யோசிக்கவில்லை. நாங்கள் பெண் பயணிகளை ஏற்றி செல்கிறோம். அந்த சலுகை கட்டணத்தை எங்களுக்கு அரசு தரலாம். அரசு பஸ்களுக்கு எப்படி டீசல் செலவாகிறதோ அது போல் எங்களுக்கு செலவு ஏற்படும் அரசு மானியம் தந்தால் வெற்றி பயணம் தனியார் பஸ்சில தொடர முடியும் என தனியார் பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.
வாழ்வாதாரம் மொத்தமாக போய் விட்டது என அவர்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள் ஆட்டோ டிரைவர்களின் நிலைமையும் பரிதாபமாக இருக்கிறது. பல ஆயிரம் ஆட்டோக்கள் பெண் பயணிகளை நம்பி தான் இருக்கிறது. ஆண்கள் அதிகளவு இரு சக்கர வாகன பயணத்தில் இருக்கின்றனர். பெண் பயணிகள், ஆட்டோக்களை நாடி செல்லும் நிலை இருக்கிறது. இதுவும் மொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆட்டோ டிரைவர்கள் புலம்புகிறார்கள்.

I felt my luck change as soon as I signed up. The bonuses are generous and the site is very secure. You guys should definitely try lucky33me tonight.