கோவையில் ‘டிஜி காப் வாட்ஸ் அப்’ சேவை பயன்படுத்த போலீசார் விழிப்புணர்வு…!
கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் போலீசாரை எளிதில் அணுகும் வகையில், ‘கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் அப் சாட்போட் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது .
பொதுமக்கள் 98400 91100 என்ற எண்ணை தங்கள் செல்போனில் சேமித்து, வாட்ஸ்அப் மூலம் ஹேய் (hi) என ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையைப் பொதுமக்கள் பெறலாம். இதற்கென தனியாக ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இந்த வாட்ஸ்அப் சாட்போட் மூலம் 9-க்கும் மேற்பட்ட துறைகளில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. ‘ஹேய் என அனுப்பும் நபர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையம் எது,அதன் தூரம் மற்றும் நிலைய அதிகாரியின் தொடர்பு எண் ஆகியவற்றை உடனடியாகப் பெறலாம். அதில் சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் போன்றவை குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் போதைப்பொருள் புழக்கம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்க முடியும். புகாரின் தற்போதைய நிலை என்ன, விசாரணை அதிகாரி யார் போன்ற விவரங்களை தனித்துவமான ஐடி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
நள்ளிரவு நேரங்களில் அவசர உதவி தேவைப்பட்டால், அந்தப் பகுதியில் பணியில் இருக்கும் ரோந்து அதிகாரியின் விவரங்களை உடனே அதில் பெறலாம். சைபர் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்களை இதில் காணலாம்.
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துதல், திருடப்பட்ட வாகனங்களின் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் அவசர கால தொடர்பு எண்களைப் பெறுதல் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
இந்தச் சேவையை 24 மணி நேரமும் கண்காணிக்க கோவை மாவட்ட காவல்துறையில் தனி ‘டெஸ்க்’ மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாவட்ட போலீசார் தொடங்கிய டிஜி காப்’ வாட்ஸ் அப் சேவையுடன் மாநகர போலீஸ் ஸ்டேஷன்
இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட போலீசார் புறநகர் பகுதியில் டிஜி காப்’ வாட்ஸ்அப் சேவை குறித்து கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்களிடம் டிஜி காப் வாட்ஸ்அப் எண் சென்றடைய மற்றும் அதனை பயன்படுத்துவது குறித்து அறிந்து கொள்ள அனைத்து மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 300க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதன் அடுத்தப்படியாக டிஜி காப் வாட்ஸ்அப் சாட்போட் சேவை குறித்து அறியாத பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட 120 கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் பஸ் நிறுத்தம், ரயில் நிலையங்கள், சுற்றுலா தளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் டிஜி காப் வாட்ஸ்அப் சாட்போட் சேவை குறித்து பிளக்ஸ் பேனர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பேனர் ஆங்கிலம், தமிழ், ஆங்கிலம் மற்றும் தமிழ் என 2 மொழிகளில் வைக்கப்பட்டு வருகிறது. பேனரில் கோவை டிஜி கர்ப் 98400 91100, காவல் உதவி ஒரு (Hi) போதும், அவசர உதவிக்கு எஸ்ஓஎஸ் என்றும், இந்த வாட்ஸ்அப் சாடபோட் சேவையில் அருகிலுள்ள காவல் நிலையம், இரவு ரோந்து அதிகாரி, போக்குவரத்து அபராதம் செலுத்துவது. தகவல் பகிர்வு இணையவழி மோசடி குறித்து புகாரளிக்க, பாதுகாப்பு குறிப்புகள், இலவச சட்ட உதவி ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மக்கள் எளிதில் பயன்படுத்த முடியும். கல்லூரி மாணவர்களுக்கும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் அங்கு பேனர்கள் வைக்கப்படும். அதேபோல டிஜி காப் வாட்ஸ்அப் சாட்போட் சேவையுடன் மாநகர போலீஸ் ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டுள்ளது. முதலில் பொதுமக்கள் மாநகருக்குள் நின்று டிஜி காப் வாட்ஸ்அப் சாட்போட்டில் ஹேய் என்று அனுப்பினால் அருகில் உள்ள மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் விவரங்கள் மட்டுமே வரும். தற்போது மாநகர போலீஸ் ஸ்டேஷன்களின் விவரங்களும் வரும்.தற்போது புறநகர் மக்களுக்கு மட்டுமில்லாமல் மாநகர் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவை மாநகர் போலீஸ் ஸ்டேஷன் இணைப்பட்டது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள ரேஸ்கோர்ஸ் உட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
