கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பி ஓட்டம்
கோவையில் கடந்த 30.10.2026 தேதி இரவு 11 மணி ளவில், 25 வயதான ராகவன் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
31.10.2026 அன்று இரவு 12.40மணியளவில், அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களைத் தள்ளிவிட்டு காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.
உடனடியாக, கோவை மாநகர காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் பணியினருடன் ஒருங்கிணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
தப்பிச் சென்ற குற்றவாளியை கண்டுபிடித்துக் கைது செய்வதற்காக உயர் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர வாகனச் சோதனைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தப்பிச் சென்ற குற்றவாளியை விரைவில் கைது செய்வதற்கு ஏதுவாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து காவல் பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவாளியை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராகவன் மீது ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் திருட்டு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இதே போல் போலீசார் பிடியிலிருந்து தப்பி சென்று மீண்டும் பிடிபட்டுள்ளார். தற்போது அதே பாணியில் அவர் தப்பி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best betting experience I have had in a while. Everything is transparent and the odds are quite competitive. Big thumbs up for br442bet.