கோவையில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்…

கோவை வழியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

பெங்களூரில் எஸ்எம்விடி ரயில் நிலையத்தில் இருந்து வரும் 7-ம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு

புறப்படும் ரயில் (வண்டி எண்: 06545), அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், கண்ணூரில் இருந்து 7-ம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 06546) மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

இந்த ரயில்கள் வையிட்பீல்டு, பங்கார்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு வடகரை, நலச்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் றின்று செல்லும். இதில் ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொதுப்பெட்டிகள் இருக்கும்.

இந்த ரயில் 7 ம் தேதி காலை 5 மணிக்கு சேலம் வந்தடைந்து 5.03 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு காலை 6.05 மணிக்கும், திருப்பூருக்கு காலை 6.58 மணிக்கும் போத்தனூருக்கு காலை 8.23 மணிக்கும் சென்றடையும். மேலும், மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ரயில் 8 ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு போத்தனூர் வந்தடைந்து 12.12 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு அதிகாலை 1.15 மணிக்கும், ஈரோட்டுக்கு 210 மணிக்கும் சேலத்துக்கு அதிகாலை 3.17 மணிக்கும் சென்றடையும்.

=

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *