கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு மெஷின்கள் அனுப்பி வைத்தனர்
கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட அளவில் இந்த வாக்கு சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டு மிஷின்கள் சப்ளை செய்யும் படி இன்று துவங்கியது.
மாவட்ட அளவில் 15223 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த இயந்திரங்கள் இன்று காலை 11:00 மணி முதல் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்த ஓட்டு பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் 330 வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வாகனங்கள் அனைத்தும் ஓட்டு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே முறையாக பொருட்களை வைத்து ஓட்டுப்பதிவுக்கு தயாரான பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து ஓட்டு சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மற்றும் வெப் காஸ்டிங் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை மேட்டுப்பாளையம் தொண்டாமுத்தூர் கவுண்டம்பாளையம் பொள்ளாச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வன எல்லைக்கு கிராமங்களில் அதிக அளவு ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
