செந்தில் பாலாஜி பட்டி பிளான்… அம்மன் அர்ஜுனன் புகார்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் கோவை தெற்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் இன்று மாலை புகார் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது

நான் 50 ஆண்டுகளுக்கு முன்பே கோவைக்கு வந்து விட்டேன். பிழைப்பு தேடி கோவை வந்தேன். எனக்கும் கோவை மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு அன்பு உண்டு. ஆனால் செந்தில் பாலாஜி அப்படியல்ல. தேர்தலுக்காக ஓட்டுக்காக கோவை வந்திருக்கிறார். அவர் தப்பு கரூரில் வேகாது. எனவே அவர் கோவை வந்து போட்டியிருக்கிறார்.

கோவைக்காரர்களை நம்பாமல் கரூரிலிருந்து டம்மியாக 18 பேரை சுயேட்சையாக களம் இறக்கி இருக்கிறார். கோவை திமுகவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடக் கூட ஆள் இல்லையா. அவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

செந்தில் பாலாஜி பணம் கொடுத்து ஜெயிக்கப் பார்க்கிறார். பணநாயகம் இங்கே எடுபடாது. கரூர் மாதிரி கோவையில் மக்களை ஏமாற்ற முடியாது. கூப்பன் கொடுத்து மக்களை ஏமாற்றவர் நினைக்கிறார். ஆர் கே நகர் தொகுதி கரூர் மற்றும் அரவக்குறிச்சியில் அவர் இது போல தான் செய்தார்.

இப்போது கரூர் மாதிரி கோவையில் வாக்காளர்களை பட்டி போல் அனைத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்து தனக்கு ஓட்டு போட வற்புறுத்தி வருகிறார். தெற்கு தொகுதியில் பல இடங்களில் அவர் இது போல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சொல்லி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். செந்தில் பாலாஜியை நான் கெத்தாக ஜெயிப்பேன். அவர் டெபாசிட் கூட வாங்க முடியாது. கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து அதிமுக ஜெயிக்கும். அதில் நான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *