ஜனநாயகன் திரைப்படத்தை கோவையில் சேனலில் ஒளிபரப்பியவர் கைது…!

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (44 ).

இவர் உள்ளூரில் ராசி பிரைம் மூவி என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இதில் கடந்த 11ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்தார் .இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக கோவை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் மோகனப்பிரியா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

மத்திய தணிக்கை துறை ஆய்வில் ஜனநாயகன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை முறைகேடாக சேனலில் வெளியிட்ட பழனிச்சாமி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரது சேனல் மூடி சீல் வைக்கப்பட்டது. இவருக்கு சேனல் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதி இன்றி சினிமா படத்தை வெளியிட்டதாக கருமத்தம்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *