கோவை மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்…
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மேயர் ரங்கநாயகி உட்பட கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் துவங்கியவுடன், கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டு, மாநகரில் 100 வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் முறையாக நடப்பதில்லை என முறையிட்டு, கோஷம் எழுப்பினர். அப்போது திமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள், 39 தீர்மானங்கள் அடங்கிய நகல் மட்டுமே ஏற்கனவே கவுன்சிலர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கூட்டம் தொடங்கியவுடன் கூடுதலாக 52 தீர்மானங்கள் அடங்கிய நகல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மான நகலைக்கூட படித்துப்பார்க்க நேரமில்லை என்றனர். இதனால், சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து ஒரு மணி நேரம் கூட்டத்தை ஒத்திவைப்பதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார். அந்த ஒரு மணி நேரத்தில் தீர்மான நகல்களை படித்துக்கொள்ளலாம் எனவும் அவகாசம் அளித்தார்.
அதன்படி, ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்தில், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் 102 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து அகற்றிவிட்டு, மறு கட்டுமானம் மேற்கொள்ளுதல், மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஜீவானந்தம் வீடு, திலகர் வீதி, நேரு வீதி என்.ஜி.ஆர் வீதி, ராதாகிருஷ்ணன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டுதல் உள்பட பல்வேறு பணிகள் தொடர்பாக மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர்.
கார்த்திக் செல்வராஜ் (திமுக): மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெறுவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலக எல்லைக்குள் வசிக்கும் மக்கள் வீடு கட்டிடம் போன்றவை கட்டுவதற்கு, பில்டிங் பிளான் அப்ரூவல் கேட்டு விண்ணப்பித்தால், அவை பல மாதங்களாக கிடப்பில் போடப்படுகிறது. தற்போது, 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, 44வது வார்டு கவுன்சிலர் காயத்ரி (காங்) கூட்ட அரங்கத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். அந்த சமயத்தில், மேயர் ரங்கநாயகி அவரை கடந்து, மமன்ற கூட்டத்தில் பங்கேற்க சென்றார். அப்போது, காயத்ரி, மேயர் ரங்கநாயகியிடம், ‘என்னை சஸ்பெண்ட் செய்தது ஏன்?” மாமன்ற கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பிரச்னைகளுக்காக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை. எனது வார்டில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
இதன்பின்னர், கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி பேசுகையில், “கவுன்சிவர் காயத்ரி, அவை மரபுக்கு எதிராக நடந்துகொண்டதால், 2 கூட்டத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இப்போது எனது வார்டு மக்களின் பிரச்னைக்காக பேச முடியவில்லை என்கிறார், அவர், தனது வார்டு குறைகளை தெரிவிக்க வேண்டுமானால் மேயர், கமிஷனர் அறைகளில் வந்து தெரிவிக்கலாம். பொதுவெளியில் தர்ணா போராட்டம் நடத்தக்கூடாது. அவரை கண்டிக்கிறேன்” என்றார்.
மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில், “கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எந்த பணிகளும் நடப்பதில்லை” எனக்கூறி தீர்மான நகலை மாமன்ற அரங்கில் வீசி எறிந்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கையில் அரிக்கேன் விளக்குடன் மாநகராட்சி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ஏராளமான தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. பியூஸ் போனால்கூட பழுது பார்ப்பதில்லை. பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அரிக்கேன் விளக்குடன் கூட்டத்தில் பங்கேற்ற இவர்கள், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு கூட்டத்திலிருந்த வெளிநடப்பு செய்தனர்

If you are looking for a place with a huge selection of slots and great rewards then this is it. I am having a blast on brpgwin.