பாரில் கள்ள ரூபாய் நோட்டு மாற்ற முயன்ற கும்பல் கைது…
கோவையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் பாரில் ரூ.500 நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்ற போது சிக்கினர். கோவை பேரூர் பைபாஸ் ரோட்டில் 11 டூ 11 பார் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை 6 பேர் கொண்ட கும்பல் வந்தனர். பின்னர், அவர்கள் மது வாங்கி விட்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அந்த நோட்டுகளை பார்த்தபோது, பார் ஊழியர்களுக்கு கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் உட்பட சிலர் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு கடைவீதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், 500 ரூபாய் நோட்டுகளை வாங்கி பரிசோதனை செய்ததில் பாரில் அவர்கள் மாற்ற முயன்றது கள்ளநோட்டு எனவும், இதேபோல் அவர்கள் கடைவீதிகள் மற்றும் பொதுமக்களிடம் புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்த போலீசார் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த கோவை கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்த அக்தர் பர்வேஷ் (21) கல்லூரி மாணவர் ஆபில் (20), செல்வபுரம் அமுல்நகரை சேர்ந்த யாயூ லியாஸ் (19), தெற்கு உக்கடத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஷாகித் (19), கல்லூரி மாணவர் முகமத் இர்பான் (18), முகேஷ்குமார் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.1.86 லட்சம் (372 எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள்) கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலுக்கு முகேஷ்குமார் மூளையாக செயல்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், கள்ளநோட்டு எங்கு அச்சடிக்கப்பட்டது? வேறு யாரிடமாவது இருந்து கள்ளநோட்டை பெற்று கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுக்க முயன்றனரா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட விவகாரம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Honestly, this is one of the most stable sites I have used recently. The loading speed is great and the interface is very friendly for beginners. Highly recommend phjljl7777 for anyone looking for a smooth experience!
Best app for gaming I have used this year. The layout is intuitive and it doesnt crash during peak hours bdgk444app
The sports betting options here are top notch. The odds are competitive and the live updates are spot on. idjasabola is my new favorite for match days.
The graphics are amazing and the gameplay is just top notch. It feels like a real casino from the comfort of my own home. Big shoutout to ss7777casino.