கோவையில் குழந்தைகளை காப்பாற்ற உதவி கேட்டு கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது.

இதில், மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேந்திரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் மனு கொடுக்க வந்திருந்தார். தனது மகள் மருமகன் குடும்ப பிரச்னையால் 4 ஆண்டிற்கு முன் தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்களின் 8 வயது மகள், 11 வயது மகனை தனது பொறுப்பில் வளர்த்து வருகிறேன். என்னால் வேலைக்கு போக முடியவில்லை. என பேர குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் அன்பு கரங்கள் திட்டத்தில் உதவி கேட்டேன். ஆனால், யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. சாப்பாட்டிற்கு கூட வழியின்றி தவிக்கிறேன். குழந்தைகளை படிக்க வைக்க வேண்டியுள்ளது” என அதிகாரிகளிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

அம்பேத்கார் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அதன் தலைவர் ரங்கநாதன் அளித்த மனுவில்,” பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடை நிர்வாகி சண்முகசுந்தரம் என்பவர் பெண்களிடம் நகையை மாற்றி புது நகை தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வருகிறார். 40 பவுன் தங்க நகை, 10 லட்சம் ரூபாய் வாங்கி உரியவர்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். நேரடியாக சென்று கேட்ட போது பாதிக்கப்பட்டவர்களை ஆட்களை வைத்து மிரட்டி வருகிறார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “கணபதி விவேகானந்தா நகர் புறம்போக்கு பகுதியில் வசித்த கணவர் இழந்த பெண், வயதான தனது தாய், இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

இவருக்கு கீரநத்தம் வடக்கு திட்ட பகுதியில் வீடு ஒதுக்கியதாக பங்கு தொகை செலுத்தி ரசீது, ஒதுக்கீட்டு உத்தரவு பெற்றார். ஆனால், அதிகாரிகள் உதவியில் போலி ஒதுக்கீட்டு ஆணை பெற்று 3 லட்ச ரூபாய் வாங்கி விற்று விட்டதாக தெரிகிறது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்து முறையிட்டும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரை செங்கப்பள்ளி கருப்பி என்பவர் கொடுத்த மனுவில், “என் அசல் பட்டா மழையில் வீணாகி விட்டது. ஓலை குடிசை வீட்டில் நான் வசிக்கிறேன். அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் அசல் பட்டா கேட்டு விண்ணப்பித்து மாத கணக்கில் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு பட்டா கிடைக்கவில்லை. பட்டா தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அக்கரை செங்கப்பள்ளி பாரதி என்பவர், ” என் கணவர் இறந்து விட்டார் இலவச பட்டா கேட்டு நான் விண்ணப்பம் கொடுத்தேன். அரசு துறையினர் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் இதுவரை இடம் வழங்கவில்லை” என தெரிவித்தார்.

போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோடு ஹரி ரங்கராஜ் (//) என்பவர் நான் தனி பட்டா கேட்டு விண்ணப்பம் தந்தேன். நில அளவை துறையினர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் இன்றி நிலம் அளக்க மறுக்கிறார்கள்” என மனுவில் தெரிவித்திருந்தார்.

32°C Mostly cloudy

3 thoughts on “கோவையில் குழந்தைகளை காப்பாற்ற உதவி கேட்டு கலெக்டர் ஆபீஸில் பெண் கண்ணீர்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *