கோவை ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம்…

கோவை விமானநிலையம் அருகே நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை விமானநிலையம் அருகே சித்ரா ஜங்சனில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று பீளமேடு போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு அறையில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

விசாரணையில், இந்த நட்சத்திர ஓட்டல் விமானநிலையத்துக்கு அருகே இருப்பதால், தொழில் நிமித்தமாக கோவைக்கு வரும் தொழில் அதிபர்களை குறி வைத்து விபசாரம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து விபசாரம் நடத்திய வருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோன்று கோவையில் பல நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள ஓட்டல்கள், மசாஜ் சென்டர்களில் அதிகளவில் விபசாரம் நடந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

எனவே மாநகர போலீஸ் அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி, அடிக்கடி நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் ரகசிய ரெய்டில் ஈடுபட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

3 thoughts on “கோவை ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *