கோவையில் ஆயிரம் அடிக்கு கீழே சென்றது நிலத்தடி நீர்மட்டம்…
கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது வரை வெகு சில நாட்களே மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள பேரூர் குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள், குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை பெய்யும்போதே இந்த அணை நிரம்பி விடும். ஆனால், தற்போது வரை அணையில் 32 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது.
கோவை மாவட்டம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்ற போதிலும் தென்னை, பாக்கு, சின்ன வெங்காயம், தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களும் அதிகளவு இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர், அன்னூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 13 மீட்டருக்கும் கீழ் சென்றுவிட்டது.
மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றிற்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சும் நிலை உள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:
விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை. வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான செலவுகளும் அதிகரித்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ.70 கட்டணமாக இருந்தது.
தற்போது அது ஒரு அடிக்கு ரூ 105 என உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரம் அடி வரை ஆழ்துளை கிணறு அமைக்கவும், மின்மோட்டார் பொருத்தவும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகிறது. இருப்பினும் மிக குறைந்த அளவு தண்ணீர்தான் கிடைக்கிறது. சில நேரங்களில் இந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமலும் போய்விடுகிறது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தாலும் வீணாகிவிடுகிறது.
எனவே, விவசாயத்தை காப்பாற்ற பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், கைவிடப்பட்ட கிணறுகளை கண்டறிந்து ‘வாட்டார் ரீ சார்ஜ்’ எனப்படும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் கோவையில் 70 சதவீதம் அளவிற்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தோல்வியில் முடிந்துவிட்டது.
தனியார் லாரிகள் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய ரூ. 1,800 கட்டணமாக கேட்கின்றனர். இவ்வளவு தொகை செலுத்தி தென்னை மரங்களை காப்பாற்றுவது இயலாது, மாவட்டத்தில் கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன. கைவிடப்பட்ட கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநில அரசு தெளிவான திட்டங்களை, தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Finally found a site that actually pays out consistently. The interface is very user friendly and easy to navigate. Give phbigbunny a try if you are in the PH.
Really impressed with the variety of options here. I spent the whole weekend playing and the rewards are actually decent. phtayahot is definitely my new favorite go-to.
The customer support is actually helpful which is rare these days. I had a small issue with my deposit and they sorted it in minutes. Give au8802com a go.