தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல் அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 27 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் இதுவரை 5.04 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருள்களை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். இன்று பறிமுதல் செய்த பணம் மருத்துவம் வியாபாரம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது .

சிலர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு சென்றபோது பிடிபட்டனர். தேர்தல் பிரிவினர் கூறுகையில் உரிய ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம். அரசியல் கட்சி மற்றும் பல்வேறு இடங்களில் பரிசு பொருட்கள் பணம் பதுக்கி இருப்பதாக புகார் வந்தால் சோதனை நடத்தப்படும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *