மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடிக்க முயன்ற இளம் பெண் கைது…
கோவை வடவள்ளி அருகே உள்ள சண்டபாளையம் கீழ ராதா தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பொன்னாத்தாள் (67). இவர்களது ஒரே மகளை ஈரோட்டில் திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
அதன்பின்பு தனியாக வசித்து வரும் பொன்னாத்தாள் சுண்டபாளையம், முருகன் கோயில் அருகில் பூ கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில், கடந்த 9ம் தேதி பகலில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியிடம் 50 ரூபாய்க்கு பூ வேண்டும் என பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மூதாட்டி பூ விற்பனை செய்த பணத்தை எண்ணி கொண்டிருந்தார். மேலும் கழுத்து, காதில் தங்க நகை அணிந்திருந்தார். இதனை பார்த்த அந்த பெண் கொள்ளையடிக்க திட்டமிட்டு அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் மூதாட்டியை தாக்கினார். மேலும், அங்கிருந்த அரிவாளால் வெட்டினார். இதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே வசிப்பவர்கள் ஓடி வந்தனர்.
இதனால் பயந்து போன அந்த பெண் கொள்ளை முயற்சியை கைவிட்டு தான் வந்த ஸ்கூட்டியில் அங்கிருந்து தப்பி சென்றார்.
வலியால் துடித்த பொன்னாத்தாள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், மூதாட்டியை வெட்டியது கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரம்யா (31) என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ரம்யா சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளார். அதன் பின்பு தனது கணவர் அருண்குமாருடன் கலிக்கநாயக்கன்பாளையம் சென்று விட்டார்.
இதையடுத்து மூதாட்டி தனியாக வசிப்பதால் அவரிடம் பணம், நகை பறிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரம்யா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The bonuses they offer for new players are legit and really give you a head start. I’m having a blast exploring the slots at vn5mm88
The lite version is exactly what I needed for my older phone. It runs perfectly without lagging at all. Get it at bingoplusliteappdownload.
Love the vibe of this site! It is very user friendly and the games load quickly on my phone. bigbunnylogin makes gaming so much easier.