ரயில்வே துறையில் வேலை வய்ப்பு…

ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 2026-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் மொத்தம் 5,236 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பட்டதாரி நிலை பணிகளில் மொத்த காலியிடங்கள் 3,548 இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்ட படிப்பு அவசியம். வயது வரம்பு 1.01.2027 தேதியின்படி 18 முதல் 33 வயது வரை (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு) இருக்கலாம். வரும் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

|இளநிலை 12ம் வகுப்பு நிலை பணிகளில் மொத்த காலியிடங்கள் 1,688 ஆகும். கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி (50% மதிப்பெண்களுடன்) இருக்க வேண்டும். வயது வரம்பு 01.01.2027 தேதியின்படி 18 முதல் 30 வயது வரை (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு). விண்ணப்பிக்க வரும் 13ம் தேதி கடைசி நாள். இந்த போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

4 https://forms.gle/VufcaiNBxoHM23zp8 என்ற கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *