வன உரிமை சட்டம் பழங்குடி இன மக்கள் சங்கம் போராட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மேகமலை பகுதியில் மக்கள் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும். பழங்குடியினரை ஆக்கிரமிப்பாளர்கள் என சொல்லி விரட்ட கூடாது, வன உரிமை சட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பழங்குடி மக்களுக்கு ஒன்றிய மாநில அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டி தர வேண்டும்.
பழங்குடி மக்களுக்கு சமூக சான்று வழங்கும் போது மதத்தின் பெயரை குறிப்பிடாமல் பழங்குடி என்று மட்டும் குறிப்பிட்டு சமூக சான்று தர வேண்டும் வளர்ச்சி என்ற பெயரில் பழங்கும் மக்களை வாழ்விடங்களில் இருந்து வெளியேற்ற கூடாது.
பழங்குடி மக்கள் வசிக்கும் இடங்களிலிருந்த பட்டா வழங்கி வீடு கட்டி தரவேண்டும். தோலாம்பாறை பகுதியில் உள்ள ஊக்கையனூர், மொட்டியர் வாழும் பழங்குடி மக்களுக்கு சுடுகாடுக்கு செல்ல பொது வழி ஏற்படுத்த தர வேண்டும்.
நீலம்பதி பழங்குடி மக்களுக்கு ஆடு மாடு மேய்க்க செல்ல பொது வழி தரவேண்டும்.
பச்சாம் வயல் பகுதி பழங்குடி மக்களுக்கு சுடுகாடு ஏற்படுத்தி தர வேண்டும்.
கிணத்துகடவு சங்கராயபுரம், முத்துகவுண்டனூர், கருப்பட்டி பாறை போன்ற பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனை பட்டா உடனே கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். முருகன்பதி, அய்யன்பதி, சிள்ளும்பதி போன்ற பகுதிகளுக்கு தரமான வீடு கட்டி தரவேண்டும். சிறுவாணி பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு இடத்துடன் வீடுகள் வழங்க வேண்டும்.
ஜம்புகண்டி பகுதியில் அரசு கட்டி கொடுத்த வீடுகள் முழுவதும் பழுது அடைந்து விட்டது. புதிதாக தரமான விடுகள் கட்டி தரவேண்டும்.
சின்ன ஜம்புகண்டியில் இடத்தை அளந்து பட்டா கொடுக்கவேண்டும். கொண்டனூர், புதூர், ஆனைகட்டி பகுதியில் உள்ள கண்டிவழி, பணப்பள்ளி ஊர்களுக்கு பஸ் வசதி வேண்டும். கூட்டு புளி காட்டுக்கு அரசு கட்டிய வீடுகள் பழுது அடைந்து விட்டதால் புதிதாக தரமான வீடுகள் கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மீராபாய், முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

I’m really impressed with the customer support and the overall vibe of the site. It feels very professional yet welcoming. Visit vn88xxcom for a great experience.