வி த லீடர்ஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டி : அண்ணாமலை பேட்டி

கோவை நீலாம்பூரில் நடந்த விழாவில் வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். விழாவில், பாக்டர் அப்துல்கலாமின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் வீதி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் போட்டியிடுவோம். அதற்காகத்தான் இந்த பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் வீ தி லீடர்ஸ் அமைப்புக்கும், தமிழக வெற்றி கழகத்துக்கும் இடையே தான் போட்டி என்று கூற முடியாது. திமுக, அதிமுக உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகளும் உள்ளன. சீமான், அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் அரசியலில் இருக்கிறார்கள். நாங்கள் மாறுபட்ட அரசியலை முன்னெடுக்க விரும்புகிறோம். கீழ்மட்டத்திலிருந்து வளர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் .

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தலைவர்களை நிறுத்தி, நாங்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டுவரப் போகிறோம் என்பதை மக்களிடம் எடுத்துரைப்போம். உள்ளாட்சி தேர்தலில் இருந்து படிப்படியாக வளர்ந்து மேல்நிலைக்கு செல்ல விரும்புகிறோம். நாங்கள் மாறுப்பட்ட கண்ணோட்டத்தோடு அரசியலை பார்க்கிறோம். எல்லோரும் தலைவர்கள் என்கின்ற நோக்கத்திலே களத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் மின்சாரத்தை சேமிப்பதற்கான பேட்டரி வசதிகள் போதிய அளவில் இல்லை. ராஜஸ்தான்,

மத்திய பிரேதேசம் போன்ற மாநிலங்களில் இத்தகைய வசதிகள் உள்ளன. தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாக, பீக் பவர் சீசன்ல வந்து பவர் ஷார்ட் ஆகுது. இங்க ஓபன் மார்க்கெட்டில் ரூ.35, ரூ 30, ரூ.28க்கு தொடர்ச்சியா மின்சாரம் வாங்குறாங்க.

அதனுடைய இம்பாக்ட் நம் கணக்குல அதிகமாகுது. இதற்கான முதலீடுகளை உரிய காலத்தில் மேற்கொள்ளாததால், தமிழக மக்கள் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மின்சாரத்தை வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் மின்சார தட்டுப்பாடு மற்றும் தொழில் துறையில் சிக்கல்கள் உருவாகின்றன.

அரசு கடந்த காலத்தை பற்றி பேசிக்கொண்டிருப்பதைவிட எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறது. என்பதை தெளிவுபடுத்த வேண்டும் இளைஞர்கள் அரசிடம் கேள்வி கேட்பது தவறல்ல. அதேபோல், அரசு அவர்களுக்கு பதிலளிப்பதும் தவறல்ல. இளைஞர்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும். போராட்டங்கள் ஜனநாயக வழியில் நடைபெற வேண்டும்.

போராட்டங்களை கட்டுப்படுத்துவது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தக்கூடும். தண்ணீர் பிரச்னைகளிலும் எதிர்கால அபாயங்களை உணர்ந்து அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும் முதல்வரின் வருகையின் போது பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்த கூடாது. முதல்வர் எளிமையை கடைபிடிக்க வேண்டும். அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தால் போதும்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது. முதல்வர் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது.

தமிழக அரசுக்கு, வெற்றி கழகத்துக்கு, விஜய்க்கு இன்னைக்கு பாப்புலாரிட்டி எல்லாம் வேண்டாங்க. அவருடைய பிரபலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் தலைவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விஜய் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றி முன்னுதாரணத்தை உருவாக்கலாம்.

3 thoughts on “வி த லீடர்ஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டி : அண்ணாமலை பேட்டி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *