விஜய்யை நம்பியும் கட்சியை கலைத்தோம்.. கோவையில் பாரத மக்கள் முன்னேற்ற கழகம் புலம்பல்..!

பார்த மக்கள் முன்னேற்ற கழகம் (பாமமுக) கடந்த ஆண்டு தவெகவுடன் இணைந்தது. கட்சியை கலைத்து விட்டு அந்த கட்சியில் இருந்த அனைவரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார்கள். இந்த நிலையில் நேற்று, நாங்கள் இனி தவெகவுடன் இருக்க மாட்டோம் மீண்டும் தாய் கழகமான பாரத மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கி விட்டோம். பிரிந்து சென்ற நாங்கள், திரும்ப ஒன்றாக வந்து விட்டோம் என அந்த கட்சியின் மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார் .

அவர் கூறுகையில், “விஜய் நன்றாக செயல்படுவார் என நினைத்து அவரை சந்தித்தோம். அவர் கட்சியை கலைத்து விட்டு எங்களுடன் சேர்ந்து விடுமாறு கூறினார். நாங்களும் கட்சியை கலைத்து விட்டு 2 ஆயிரம் பேர் அவருடன் சேர்ந்து விட்டோம். அங்கே போனால், எந்த மக்கள் பிரச்னையையும் பேச மறுக்கிறார்கள்.

இங்க பாரு விஜய், அங்க பாரு விஜய் என்கிறார்கள். சினிமா படம் காட்டுவது போல் தொடர்ந்து வேடிக்கை காட்டுகிறார்கள். ஜனங்களின் அடிப்படை பிரச்னைக்காக குரல் கொடுப்போம் என்றால் சும்மா இருங்க என்கிறார்கள். அவர்களுக்கும் பேச தெரியவில்லை.

நாங்கள் பேசவும் விடமறுக்கிறார்கள். நாங்கள் ரொம்ப வருஷமா கட்சி நடத்தறோம். ஜனங்களுக்காக உழைத்தால் தான் மதிப்பார்கள், சும்மா போய் ஓட்டு கேட்க முடியுமா, நீங்க என்ன வேலை செஞ்சீங்க என மக்கள் திருப்பி கேட்பார்கள், நாங்க விஜய் கட்சி என சொன்னா போதுமா, இன்னும் பச்ச குழந்தை மாதிரி நடந்துக்கிறாங்க, சரி அங்க இருந்கா எதுவும் ஆகாது என நாங்கள் திரும்ப வந்து விட்டோம்.

மீண்டும் எங்களின் பழைய கட்சி பெயரில் தொடர்ந்து செயல்படுவோம், தேர்தல் நேரத்தில் ஆதரவு குறித்து பின்னர் முடிவு செய்வோம்,” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *