கோவை மாவட்ட சட்ட மன்ற தேர்தலில் 90 கண்காணிப்பு படைகள் தயார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படும். ஒரு ஓட்டு சாவடிக்கு 4 பேர் என 14,252 பேர், ரிசர்வ் நிலையில் 150 பேர். இதர பணிகளில் சுமார் 5 ஆயிரம் பேர் இருப்பார்கள். கோவை மாவட்ட அளவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படும் போது கண்காணிப்பு பணியில் ஈடுபட 90 சிறப்பு கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு படையில் போலீஸ் துணை ராணுவ படை என 4 பேர், அரசு அலுவலர்கள் 4 பேர் என 8 பேர் இருப்பார்கள்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இதில் எஸ்எஸ்டி என்ற 30 நிலையான கண்காணிப்பு படை,

விஎஸ்டி என்ற 30 வீடியோ கண்காணிப்பு படை எப்எஸ்டி என்ற 30 பறக்கும் படை அமைக்கப்படும் வீடியோ கண்காணிப்பு படை வீடியோ பதிவு செய்து பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் உள்ளகா என ஆதாரங்களை சேகரிக்கும்.

பறக்கும் படை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து சுற்றி சுற்றி சோதனை நடத்தும் நிலையான கண்காணிப்பு படை குறிப்பிட்ட சில பகுதியில் தொடர்ந்து காத்திருந்து கண்காணிக்கும். இந்த 3 விதமான கண்காணிப்பு படைகளை மாவட்ட தேர்தல் பிரிவினர் ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்களின் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

24 மணி நேரமும் சோதனை செய்யும் வகையில் இந்த சிறப்புப் படைகள் செயல்படும். இந்த சிறப்பு படைக்கான வாகனங்களை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான 90 கண்காணிப்பு படைகளை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் மாவட்ட அளவில் இந்த சிறப்பு படைகளுக்கான வாகனங்களை தயார் செய்யப்பட்டுள்ளது. அரசுத் துறையில் உள்ள வாகனங்கள் மற்றும் தனியார் வாடகை வாகனங்கள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *