கோவை மாவட்டத்தில் மேலும் 20 ஆயிரம் பேர் வாக்காளர்களாக விண்ணப்பம்..!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 11,00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்சகள், 528 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 26,96,813 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர் வாக்காளர்களாக இருந்தனர். இந்த நிலையில் 1,22,205 வாக்காளர்கள் 2 மாதத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக எஸ்ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடந்தது.

இதில் இறந்த வாக்காளர்கள் முகவரி மாறியவர்கள் முகவரியில் இல்லாதவர்கள் என 6.50 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மாவட்ட அளவில் மேலும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இப்போது வரை சுமார் 20 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். http://voter.eci.gov.in என்ற தேர்தல் கமிஷன் வெப்சைட் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் தாலூகா அலுவலகம் போன்றவற்றில் வாக்காளர்கள் சேர்ப்பு ஆப்லைன் முறையிலும் நடக்கிறது.

புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்கள் இறுதி பட்டியலில் துணை பட்டியல் என கூடுதல் தொகுப்பில் இடம் பெறுவார்கள் இவர்கள் இந்த தேர்தலில் கட்டாயம் ஓட்டு போட முடியும். தேர்தலுக்கு 10 நாளுக்கு முன் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் நடத்தப்படும்.

எனவே மக்கள் வாக்காளர்களாக தயக்கம் காட்ட வேண்டாம். வாக்காளர் சேர்ப்பு பணி குறிப்பாக 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க தீவிரம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாகவே வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *