ஸ்டாலின் போட்டோ மாட்டக்கூடாதுங்க… கோவை மாநகராட்சியில் மல்லுக்கட்டு…

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மூன்று மாதங்கள் கடந்து இன்று காலை டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் துவங்கியது.

இந்த கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு மேயர் ரங்கநாயகி முன்னாள் முதல்வர் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அழகு ஜெயபாலன் மற்றும் கவுன்சிலர் காயத்ரி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மேயர் ரங்கநாயகி தமிழ்நாடு அரசாணையில் முன்னாள் முதல்வர் புகைப்படம் மாட்ட அனுமதி உள்ளது என்று தெரிவித்தார். இதனால் காங்கிரஸ், திமுக கவுன்சிலர் இடையே கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

அப்போது திமுக-வினர் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை எடுத்து வந்தனர். தொடர்ந்து காங்கிரசார் காமராஜர் புகைப்படத்தையும் மாட்ட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர் இதனால் மாநகராட்சி கூட்டத்தில் கடும் அமளி நிலவியது. இதில் குறுக்கிட்ட மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா அரசாணையில் முன்னாள் முதல்வர் புகைப்படத்தை மாட்ட அனுமதி உள்ளது என கூறி கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார்.

இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் புகைப்படத்தை மாட்டாமலேயே முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் புகைப்படத்தை எடுத்து சென்றனர் .சிறிது நேர சலசலப்புக்கு பின்னர் மாநகராட்சி கூட்டம் துவங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *