கோவையில் வாக்காளர்களுக்காக பதுக்கிய 173 அண்டா பறிமுதல்…!
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை கண்டறிய சோதனை நடத்தி வருகிறார்கள்
இன்று உக்கடம் புல்லு காடு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பாத்திரங்களை பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் வீட்டில் 173 சில்வர் அண்டா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாத்திரங்களை தேர்தல் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இந்த அண்டாக்களை வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக விநியோகம் செய்ய பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது இதை பதுக்கி வைத்திருந்த நபர் யார் என பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.
அண்டாக்களில் திமுக கட்சி சின்னம் மற்றும் புதிய நிர்வாகிகள் போட்டோ இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே அந்த பகுதியில் சில வீடுகளில் அண்டா வழங்கி இருக்கிறார்கள். பல வீடுகளுக்கு அண்டா வழங்கவில்லை. அண்டா கேட்டு ஏற்கனவே இந்த பகுதியில் பொதுமக்கள் சிலர் மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் விசாரித்த போது அண்டாக்களை மக்களுக்கு வழங்காமல் திமுகவினர் சிலர் பதுக்கி விட்டார்கள் என புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அண்டா பதுக்கிய திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
