கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்கள் இன்று சப்ளை…!

கோவை மாவட்டத்தில் தொகுதிகளில் 3563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

இவற்றில் 8,391 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 5245 கட்டுப்பாட்டு மெசின்கள் (கன்ட்ரோல் யூனிட்), 5885 சின்னம் காட்டும் மெசின்கள் (விவி பேட்) என மொத்தம் 19,521 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

20 சதவீதம் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டில் வைக்கப்படும். 20 சதவீதம் கூடுதல் மெசின்கள் இருப்பு நிலையில் வைக்கப்படும். மெசின்களில் பழுது ஏற்பட்டால் ரிசர்வ் மெசின்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த மெசின்களை ஆன்லைன் மூலமாக சமநிலைப்படுத்தி (ரேண்டமைசேஷன்) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒப்படைக்க நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கேர்கள் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு எந்த வரிசை எண் கொண்ட ஒட்டு மெசின்கள் வழங்கப்படும் என கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் தெற்கு காலூகா அலுவலக வளாகத்கில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் பாதுகாப்பு குடோனில் இருந்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஒட்டு மெசின்கள் பிரித்து வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் தொகுதிக்கு என்எல்பி பாலிடெக்னிக், சூலூர் தொகுதிக்கு சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு பேரூர் தாசில்தார் அலுவலகம், கோவை தெற்கு தான் சட்டமன்ற தொகுதிக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர் தொகுதிக்கு சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு தொகுதிக்கு மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி,

பொள்ளாச்சி தொகுதிக்கு என்ஜிஎம் கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை தொகுதிக்கு ஆனைமலை தாசில்தார் அலுவலகம் போன்றவற்றில் ஓட்டு பதிவு மெசின்கள் மற்றும் கட்டுப்பாட்டு மெசின்கள் சப்ளை செய்யப்பட்டது.

மேலும் இரு முறை ஓட்டு மெசின்கள் சமநிலைப்படுத்தும் பணி நடத்தப்படும். குடோனில் இருந்து மெசின்களை சோதனை செய்து எடுக்க கால தாமதம் ஏற்பட்டது. இன்று வரை இரவு பகலாக மெசின்களை துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *