கோவை மாவட்டத்தில் வாக்காளர் புகார்களை பதிவு செய்ய வீடியோ குழு…

கோவை மாவட்டத்தில் வீடியோ கண்காணிப்பு குழுவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இரண்டு குழுக்கள் என்ற விகிதத்தில் இந்த வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு அலுவலரும் ஒரு வீடியோ கிராபரும் இருப்பார். இந்த குழுவினர் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிரச்சார மேடை தெருமுனைப் பிரச்சாரம் உள்பட அனைத்து விதமான பிரச்சாரங்களையும் அங்கே நடக்கும் உரையாடல்களையும் வீடியோ பதிவு செய்வார்கள்.

தேவைப்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் பதிவு செய்யவார்கள். குறிப்பாக வாக்காளர்களின் புகார்கள், வாக்காளர்களுக்கு கட்சியினர் வேட்பாளர்களாகல் பாதிப்பு ஏற்பட்டால் அதை பதிவு செய்து தேர்தல் கமிஷனுக்கு ஆதாரங்களுடன் அனுப்பி வைப்பார்கள்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் எதுவும் இருந்தால் வீடியோ பதிவு செய்வார்கள். வீடியோ பதிவுகளை தேர்தல் பிரிவில் கொடுத்து செலவின விவரங்கள் இருந்தால் அவை கணக்கிடப்படும். நிலையான கண்காணிப்பு குழு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 9 குழுக்கள் என 90 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் இந்த குழுக்கள் செயல்பட்டு வருகிறது என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *