நாளை வரை வாக்காளர்களாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு
கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது.
www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர்.
மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும், துணை பட்டியலில் இடம் பெற்றவர்களும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடமுடியும்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நாளை கடைசி நாள் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதற்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது இதில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தால் உடனடியாக பரிசீலனை செய்து பட்டியல் பெயர் சேர்க்க முடியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
