கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நிறைவு
கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும், துணை பட்டியலில் இடம் பெற்றவர்களும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட முடியும்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நேற்று கடைசி நாள் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர். இன்று வரை பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு படிவங்கள் பரிசீலனை செய்யப்படும். இன்னும் 6 நாளில், இந்த படிவங்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்த பின்னர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களையும் துணை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
