கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7.69 படிவங்கள் தயார்…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
10 தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நாளை முதல் வரும் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அரசு விடுமுறை நாளில் மனு தாக்கல் செய்ய முடியாது.
இதற்காக சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பு மனு தாக்கல் படிவம் நாமினேஷன் பேப்பர் என அழைக்கப்படும் வேட்பு மனு தாக்கல் படிவங்கள் (பார்ம் 2 பி) பெறப்பட்டுள்ளது. தொகுதிக்கு 300 நாமினேசன் பேப்பர் வீதம் 10 தொகுதிகளுக்கும் 3 ஆயிரம் வேட்பு மனு தாக்கல் படிவங்கள் வந்துள்ளது.
இதனை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து மனு தாக்கல் செய்யலாம். படிவங்கள் அனைத்தும் இலவசமாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும். சுவிதா ஆன்லைன் போர்ட்டலில் இந்த படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். இதேபோல் படிவம் 3 ஏ என்ற நாமினேஷன் நோட்டீஸ் படிவங்கள், பார்ம் 4 ஏ என்ற தகுதியான வேட்பு மனு தாக்கல் வேட்பாளர்கள் படிவங்கள் பார்ம் 5 என்ற வேட்பு மனு வாபஸ் படிவங்கள், பார்ம் 7 ஏ என்ற போட்டியிடும் வேட்பாளர் படிவம் பெறப்பட்டிருக்கிறது.
பார்ம் 10 என்ற ஓட்டு சாவடி ஏஜன்ட் நியமனத்திற்காக 1,33,612 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. மாற்று ஏஜன்ட் படிவங்கள் 44,538 தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு போட 44,538 தபால் ஓட்டு விண்ணப்பங்கள் (படிவம் 12) வந்துள்ளது. இவை தேர்தல் பணி அலுவலர்களுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டது.
தேர்தலில் ஓட்டு போடாத வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்ய படிவம் 13 ஏ டிக்கலரேசன் 1,37,176 வந்துள்ளது. ஒட்டு எண்ணிக்கை ஏஜன்ட் நியமனத்திற்கு பார்ம் 18 விண்ணப்பங்கள் 10 ஆயிரமும், மாற்று ஏஜன்ட் நியமனத்திற்கு 5 ஆயிரம் படிவமும் (பார்ம் 19) பெறப்பட்டது.
அபிடவிட் தாக்கல் செய்ய படிவம், தேர்தல் முடிவு அறிவிப்பிற்கான படிவம் 21 என 30 வகையான படிவங்கள் தேர்தல் பிரிவால் பெறப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக நேற்று வரை அனுப்பி வைக்கப்பட்டது.
மொத்தமாக மாவட்ட அளவில் தேர்தல் பணிக்காக 7,69,710 படிவங்கள் பெறப்பட்டிருக்கிறது. இதில் இருப்பில் வைக்க 88,564
படிவங்களும், விண்ணப்பம் அனுப்ப 2,82,632 பேப்பர் கவர்களும் பெறப்பட்டிருக்கிறது. தேர்தல் அலுவலர்களுக்கு கையேடு என்ற வகையில் 15,182 புத்தகங்கள், பிரதிகள் பெறப்பட்டிருக்கிறது.
அவசர தேவைக்காக 10 ஜெராக்ஸ் மெசின்கள் மூலமாக தினமும் 3 முதல் 4 ஆயிரம் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில் ஒரிரு நாளில் அழியாத மை (இன்டெலிபல் இங்க்) பெறப்படும். தேர்தல் கமிஷன் பிரத்யேகமாக பாதுகாப்பாக இதனை அனுப்பி வைக்கும். மேலும் பிற ஆவணங்கள் 3 நாளில் வந்து சேர்ந்து விடும்.
கேமரா, வெப் காஸ்டிங் பொருட்கள் வந்து விட்டது. அனைத்து பொருட்களும் தயார் நிலையில் இருக்கிறது, “என்றனர்.
