கோவை யார் கோட்டை என மே 4ம் தேதி தெரியும் செந்தில் பாலாஜி சவால் பேட்டி…

கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா அருகே திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் திமுக முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது
நான் தேர்தல் களத்தை பார்த்து பயந்தவன் கிடையாது. எப்போதும் நான் தைரியமாக பணி செய்வேன்
அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்றேன். அதே போல் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறேன். தற்போது கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போகிறேன்.

என்னை பார்த்து ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் சொல்லி இருக்கிறார் .‌ அவரால் அப்படி ஜெயிக்க முடியுமா.
அவர் தனது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அப்படி சொல்லி இருக்கிறார்.

மே நாலாம் தேதி தெரியும் யார் கோட்டைக்கு செல்ல போகிறார்கள். கோவை யாருடைய கோட்டை என்பது தெரியும் என்றார் .

மேலும் திமுக அரசு கடந்த 5 ஆண்டு காலத்தில் ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் பம்ப் செட் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

கோவை மக்கள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார்

கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆக போட்டியிடும் பேரறிவாளன் இன்று மனு தாக்கல் செய்தார்.

அவர் செந்தில் பாலாஜியை கிண்டல் செய்யும் விதமாக பத்து ரூபாய் சில்லறை காசுகளை பத்தாயிரம் ரூபாய் அளவிற்கு கொண்டு வந்து மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகளின் மூலமாக முறைகேடு செய்து வருகிறார். ஒவ்வொரு கடையிலும் பத்து ரூபாய் எப்படி வாங்குகிறார்கள் என நன்றாக அனைவருக்கும் தெரியும்.

அவரை தோற்கடிக்கும் வகையில் பத்து ரூபாய் காசுகளை கொண்டு வந்து நான் டெபாசிட் தொகை செலுத்தி இருக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

மதுபால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். திமுக ஆட்சியில் கோவையில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடக்கவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *