G square நிறுவனம் மீது மோசடி புகார்…
கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .
இவர் சவுரி பாளையம் பகுதியில் ஆர்த்தி ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை 258 கோடி ரூபாய்க்கு ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு புரோக்கிங் செய்து வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி 16 ஏக்கர் நிலம் வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .
இந்த நிலையில் ரவிக்குமாருக்கு புரோக்கர் கட்டணமாக ஒரு சதவீதம் அதாவது 2.58 கோடி ரூபாய் ஆர்த்தி ஜனார்த்தனன் தரப்பில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்த்தி ஜனார்த்தனன் அந்த தொகையை வழங்கவில்லை.
மாறாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அந்தத் தொகையை வழங்கும் என பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து ரவிக்குமாருக்கு உறுதி தரப்பட்டது . இந்த நிலையில் மூன்று மாதம் கடந்து அவருக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ரவிக்குமார் சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி ஸ்கொயர் ரெசிடென்சி
வளாகத்திற்குள் இன்று அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.
இது தொடர்பாக ரவிக்குமார் கூறுகையில் ,” ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆர்த்தி ஜனார்த்தனனுக்கு பதிலாக புரோக்கர் சார்ஜ் வழங்குவதாக உறுதி தந்தது .
ஆனால் அந்த உறுதிப்படி அவர்கள் தொகை வழங்கவில்லை . மாறாக என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். பத்திரபதிவு முடிவும் வரை முடியும் வரை என்னிடம் அமைதியாக நடந்து கொண்டார்கள் . அதற்கு பின் அவர்கள் ஆட்சி அதிகாரம் எங்களிடம் இருக்கிறது என தொடர்ந்து மிரட்டினார்கள். நான் ஜி ஸ்கொயர் நிர்வாகி பாலாவிடம் முறையிட்டேன். அவரும் தொகை வழங்குவதாக கூறினார். ஆனால் அவர் சொன்னபடி தொகை வழங்கவில்லை.
போலீசில் புகார் அளித்தேன். இது தொடர்பாக சிஎஸ்ஆர் போடப்பட்டது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து இருக்கிறேன் . எனக்கு எனது தொகையை போலீசார் பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறேன் ,” என்றார்.
இது பொய்யான புகார். நாங்கள் அந்த நிலம் வாங்கியதற்கு உரிய புரோக்கர் தொகையை வழங்கி விட்டதாக ஜி கொயர் நிறுவனம் கூறியுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பணம் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
