ஓடியாடி உழைப்பது இன்ஜினியர் சந்திரசேகர்… ஜெயிக்க போவது வானதி சீனிவாசன்…
கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி.
சங்கனூர் ,ரத்தினபுரி, கணபதி, மணியகாரன் பாளையம், கே கே புதூர், சாய்பாபா காலனி, நல்லாம்பாளையம் ,சீரநாயக்கன்பாளையம் ,வடவள்ளி, முல்லை நகர், மருதமலை, கலிக்கநாயக்கன்பாளையம், பொம்மணாம் பாளையம் போன்ற பகுதிகள் இந்த தொகுதியில் இருக்கிறது.
297 ஓட்டு சாவடி, சுமார் மூன்று லட்சம் வாக்காளர்கள் கொண்டது இந்த தொகுதி. இங்கே எந்த கட்சியினரும் எந்த வேலையும் செய்யவில்லை.
அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் தனது சொந்த செலவில் இந்த பகுதியில ஏகப்பட்ட வேலை செஞ்சு கொடுத்திருக்காரு…
வடவள்ளி மருதமலை ரோடு விரிவாக்கம் செஞ்சது , 20க்கும் மேற்பட்ட பூங்காக்களை சீரமைச்சது, குடிநீர் ,மின்விளக்கு, பாதாள சாக்கடை என வடக்கு தொகுதியை ஹை டெக் ஏரியாவா மாத்தியது சந்திரசேகர் தான்.
மருதமலை சுப்ரமணியசாமி கோயிலுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செஞ்சு தந்தது,
அடிவாரத்தில் பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்தது மலைப்பாதை மற்றும் கோயில் வளாகத்தை சீரமைக்க ஏற்பாடு செய்தது எல்லாமே இன்ஜினியர் சந்திரசேகர் வேலைதான்…
மருதமலை அடிவாரத்தில் இருக்கிற இவரோட ஆலயம் அறக்கட்டளை ஆபீஸ்ல எப்பவும் ஏகப்பட்ட கூட்டம் இருக்கும். குழந்தைக்கு உடம்பு சரியில்ல, பெரியவங்களுக்கு சாப்பாட்டுக்கு உதவி இல்ல, ஸ்கூல் பீஸ் கட்ட முடியல, தாய் தந்தை இல்லாத குழந்தைக்கு உதவி வேணும் என ஏகப்பட்ட பிரச்சனையோட கூட்டம் கூட்டமா ஜனங்க காத்திருக்கிறாங்க.
மருத்துவ உதவி தேவைப்பட்டால் வீடு தேடி சென்று உதவி செய்வார் , இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவி, பள்ளி கல்லூரியில் படிப்பதற்கு தேவையான உதவித்தொகை , தாய் தந்தை இறந்த குழந்தைகளுக்கான உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் என ஆலயம் பவுண்டேஷன் உருவாக்கி வாரி வாரி கொடுத்து வருகிறார் இந்த வடவள்ளி சந்திரசேகர்..
வடவள்ளி, மருதமலை, சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கட்சியினரும் விரும்பும் ஒரே நபராக இன்ஜினியர் சந்திரசேகர் இருக்கிறாருங்க. போன சட்டமன்றத் தேர்தல்ல சந்திரசேகருக்கு வேட்பாளராக சீட்டு கட்டாயம் தரனும் என அந்த பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தாங்க.
ஆனால் அம்மன் அர்ஜுனன் கேட்டார் என்பதற்காக வடக்கு தொகுதியை சந்திரசேகர் விட்டு கொடுத்துட்டாரு. இப்போ பாஜகவுக்கு ஒதுக்கீடு என வடக்கு தொகுதி பறி போயிடுச்சு…
மக்கள் பிரதிநிதியாக இதுவரை ஒரு முறை கூட போட்டியிட சந்திரசேகருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
25 ஆண்டு காலம் கட்சிக்காக தொடர்ந்து உழைத்தும் அவர் உதாசீனப்படுத்தப்பட்டு வர்றாரு.
இப்போதும் கட்சியின் கட்டளை என அவர் பாரதிய ஜனதா கட்சிக்காக வீடு வீடாக வீதி வீதியாக ஓட்டு கேட்டு அழைவது அதிமுகவினரை மிகுந்த மன உளைச்சல் செய்துள்ளதாம்.
இந்த விவரங்கள் தெரிந்தும் எஸ்பி வேலுமணி அமைதி காத்து வருவதால் கோவை மாவட்டத்தில் உழைக்கும் அதிமுக இளைஞர்கள் வட்டாரத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
கடந்த காலங்களில் யார் யார் எந்த தொகுதியில் போட்டியிட்டார்களோ அவர்களுக்கே திரும்பத் திரும்ப சீட் கொடுத்திருக்காங்க.
அதிமுக கட்டமைப்பு திமுக பாணிக்கு மாறி போயிருச்சு என அதிமுக தொண்டர்கள் கவலை படறாங்க.
‘எப்பவும் நினைச்சது நடக்காது அதிமுக மேலிடம் என்ன சொல்கிறதோ அதை சிறப்பாக செய்வோம்’ அதிமுக மற்றும் அதன் கூட்டணிகளை ஜெயிக்க வைப்போம் என வடவள்ளி சந்திரசேகர் தொடர்ந்து களத்தில் வேலை செய்து வராரு…
அவரின் உழைப்பால் பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் ஜெயிக்கப்போவது உறுதியா இருக்கு..
ஆனால் இதற்கெல்லாம் காரணமான சந்திரசேகர் யார் என தெரியாமல் திரை போட்டு மறைக்கும் அவலம் தொடர்கிறது.
களத்தில் இறங்கி மக்களை சந்தித்து ரத்தம் வியர்வையை சிந்தி யார் உழைக்கிறார்கள் என்பது எஸ்பி வேலுமணிக்கு நன்றாக தெரியும்..
இருந்தும் உழைப்பவர்களுக்கான கூலியை அங்கீகாரத்தை மறுப்பது எந்த விதத்தில் நியாயம். எஸ்பி வேலுமணியின் இன்னொரு முகமாக இருக்கும் இன்ஜினியர் சந்திரசேகர் ‘இலையின் பின்னால் கனி மறைவது போல்’ வெளியே தெரியாமல் உழைக்கிறாருங்க.. அவருக்கான ஒரு பதவி கண்டிப்பாக அதிமுக கொடுத்தே தீர வேண்டும் என வடவள்ளி மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்..
