தேர்தல் முறைகேடு வழக்குகளை பதிவு செய்யாத கோவை போலீசார்…!

Jayachandran – chief correspondent..

கோவை நகர், புறநகரில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தவிர நகர், புறநகர் போலீசாரும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்து இதுவரை சுமார் 8 கோடி ரூபாய்க்கு பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கட்சி சார்பில் பதுக்கிய அண்டா, குண்டா, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பாக போலீசார் தரப்பில் வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டியது, எல்லை மீறி பிரச்சாரம் செய்தது, நடத்தை விதிகள் மீறல் என ஏகப்பட்ட வழக்குகள் பதிவானது.

ஆனால் இந்த தேர்தலில், பரபரப்பான சம்பவங்கள் விதிமுறை மீறல்கள் தொடர்பாக கூட வழக்கு பதிவு செய்யவில்லை. உக்கடத்தில் தடையை மீறி வீடு வீடாக ஒட்டுக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மக்கள் மறியல் போராட்டம் செய்து புகார் தெரிவித்தும் யார் மீது வழக்கு பதிவாகவில்லை.

அதிமுகவினர் ஹாட்ஸ் பாக்ஸ், சில்வர் பிளேட், வேட்டி சேலை பதுக்கியது தொடர்பாக புகார் சென்றது. அப்போது அதிமுகவினர், நாங்கள் குடோனில் தான் வைத்திருக்கிறோம். ஜெயலலிதா பிறந்த நாள் விழாவிற்காக இதை வாங்கியிருந்தோம். இப்போது யாருக்கும் தரவில்லை என சமாளித்தனர்.

இதை கேட்டு தேர்தல் பிரிவினர் அப்படியா என விட்டு விட்டார்கள். வழக்கும் பதிவாகவில்லை, விசாரணையும் நடக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தரப்பில் எந்த அழுத்தமும் தரவில்லை, தேர்தல் பிரிவு போலீசாரும் அலட்சியமாக இருக்கிறார்கள்.

இதனால் யார் மீதும் எந்த விசாரணையும் நடப்பதில்லை. மக்கள் தொடர்பான பொருட்கள் என்றால் பறிமுதல் செய்து விசாரணை நடப்பது தீவிரமாக இருக்கிறது. தேர்தல் பிரிவினர் கட்சி அலுவலகம், பூத் கமிட்டி அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்துவதில்லை.

பிரச்சார வாகனங்கள், வீதி பிரச்சாரத்தை கூட பின் தொடர்ந்து கண்காணித்து விதிமுறை மீறல்களை தடுப்பதில்லை. உணவு, பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு பணம் சப்ளை செய்வது பரவலாக நடக்கிறது. இதையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *