வாக்குச்சாவடி பாதுகாப்பில் உஷார்… கோவை போலீசாருக்கு பயிற்சி வகுப்பில் உத்தரவு

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்களில் ஒட்டு சாவடி பணியில் உள்ள போலீசாருக்கான ஆலோசனை, பயிற்சி கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் பல்வேறு தேர்தல் பிரிவு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட தேர்தல் பணி போலீசார் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநகர், மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஒரு போலீசார் பணியில் இருப்பார்கள். உதவிக்கு நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், ஹோம் கார்டு இருப்பார்கள் சில பகுதியில் குறிப்பாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளில் 600க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். மாநகர், மாவட்ட அளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அன்றைய தினம் பணியில் இருப்பார்கள்.

போலீசார் ஓட்டு சாவடியில் ஒட்டு பதிவுக்கு முந்தைய நாள் முதல் பணியில் இருக்க வேண்டும். ஓட்டு சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு யாரையும் அனுமதிக்க கூடாது. ஓட்டு சாவடி வளாகத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒட்டு பதிவு நாளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த நிகழ்வும் அங்கே நடக்க கூடாது. கட்சியினர் வாக்குவாதம் செய்வதை, வாக்காளர்கள் ஒட்டு போடுவதை தடுக்கும் வகையில் கட்டாயப்படுத்தும் வகையில் செயல்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதிமுறை மீறி வாகனங்களை ஒட்டு சாவடி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. சட்ட விரோத நபர்கள் ஒட்டு சாவடிக்குள் வரக்கூடாது. வாக்காளர்கள், பூத் ஏஜன்டுகள் எதாவது புகார் அளித்தால் உடனடியாக விசாரிக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அமைதியாக ஓட்டு பதிவு நடத்த முடிக்க போலீஸ் தான் துணையாக இருக்க வேண்டும். ஓட்டு பதிவு முடிந்து ஓட்டு மெசின்கள் பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி ஒட்டு எண்ணிக்கை மையம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இந்த ஜனநாயக பொறுப்பினை போலீசார் திறம்பட செய்து முடிக்க வேண்டும் என இந்த பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *