கோவையில் 10.18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்…!
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை செய்தனர் .
பீளமேடு கொடிசியா பகுதியில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 கிலோ எடையில் தங்க நகைகளும் 8.5 கிலோ எடையில் வெள்ளி நகைகளும் இருந்தது. இந்த நகைகளுக்கான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் தரவில்லை .இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் பிரிவினர் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே நகைகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அதிகாரிகளுடம் கேட்டபோது இந்த தங்க நகைகள் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் நிறுவனத்தில் தயாரித்த தங்க நகைகள் நகை கடைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும்போது பிடிபட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த தங்க நகைகளின் மதிப்பு சுமார் 10.18 கோடி ரூபாய்.
ஏற்கனவே கோவை நகரில் இதே போல் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காரில் கொண்டு சென்றபோது பறக்கும் படையினர் பிடித்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை காட்டி அரை மணி நேரத்தில் நகைகளை மீட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
