வால்பாறை சுற்றுலா வேன் கவிழ்ந்து 9 பேர் சாவு
கேரள மாநிலம் பெருந்தல் மன்னா பகுதியை சேர்ந்த 16 பேர் இன்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். பல்வேறு பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் மாலை 5:15 மணிக்கு வால்பாறையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி மலைப்பகுதி ரோட்டில் இறங்கிக் கொண்டிருந்தனர்.
டெம்போ ட்ராவலர் வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து உருண்டது. சுமார் 800 அடி தூரம் உருண்ட படி சென்ற வேன் 11வது கொண்டை ஊசி வளைவு பகுதி ரோட்டில் விழுந்தது.
இதில் வேனில் இருந்த எட்டு பெண்கள் ஒரு ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி மற்றும் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வேன் உருண்டு சென்றதால் அதில் பயணித்தவர்கள் ஆங்காங்கே சிதறி விழுந்தனர்.
கொடூரமான இந்த கோர விபத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் கண்ணீர் விட்டு கதறினார். பிரேக் ஃபெயிலியர் ஆனதா வாகனத்தில் வேற ஏதாவது பிரச்சனையா என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர்.
வாகனத்தை கேரளாவை சேர்ந்த முகமது பாசித் (28) என்பவர் ஒட்டியதாக தெரிய வந்தது. சம்பவ இடத்தை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து தொடர்பாக காடம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.
