கோவை சிறுமுகையில் ஊருக்குள் புகுந்த விளையாட்டு காட்டிய குட்டி யானை…!
கோவை சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் பகுதியில் இன்று காலை குட்டி யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது.
பிறந்து சில மாதங்களே ஆன இந்த குட்டி யானை தாயை பிரிந்து வழி தெரியாமல் ஊருக்குள் வந்து விட்டதாக தெரிகிறது.ஊருக்குள் வந்த இந்த குட்டி ஜாலியாக ரோட்டில் சென்ற பொது மக்களிடம் விளையாடியபடி சுற்றிக் கொண்டிருந்தது .
மேலும் வாகனங்களின் பின்னால் ஓடி சென்று விளையாட்டு காட்டியது. இதை பார்த்த பொதுமக்கள் குட்டியானையுடன் நின்று போட்டோ எடுத்து வீடியோ எடுத்து ரசித்து மகிழ்ந்தனர் . சிறிது நேரம் குட்டி யானை ரோடு மற்றும் பொது இடங்களில் விளையாடியபடி இருந்தது . பின்னர் அது வனப்பகுதியை நோக்கி சென்று விட்டது. இந்த குட்டி யானையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்த அந்த பகுதி பொதுமக்கள் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டனர் .
குட்டி யானையின் ஜாலி விசிட் சோசியல் மீடியாக்களில் தற்போது வைரலாக மாறிவிட்டது. காட்டுக்குள் சென்ற குட்டி யானை தனது தாயுடன் சேர்ந்து விட்டதா இல்லையா என தெரியவில்லை.
வனப்பகுதியை விட்டு வேறு எங்காவது சென்று விட்டதா என தெரியவில்லை. இது தொடர்பாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் குட்டி யானை இருக்கும் இடம் மற்றும் தாய் யானை நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக காட்டுக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
