கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு6 லட்சம் பாட புத்தகங்கள் வந்தாச்சு…!

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

.விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

, கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் 172 பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 1.20 லட்சம் மாணவர்களுக்கு வழங்க தேவையான பாடப்புத்தகங்கள் தற்போது கோவை வந்துள்ளது. இது தவிர, துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க தேவையான புத்தகங்களும் வந்துள்ளது. இதில், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ராமநாதபுரம் 80 அடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மாநகராட்சி ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன

. இதில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க சுமார் 6 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஒரு வாரத்தில் முடிக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *