கோவை ஓட்டு எண்ணிக்கை ரவுண்ட்ஸ்… டிரோன் பறக்க தடை
கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில் வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 1528 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரும்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மையம், ஸ்ட்ராங்க ரூம் பகுதிகளில் மட்டும் 300 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது .
இவற்றை கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள், இந்த நிலையில், 10 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் குழு தயார் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து 9 சட்டயன்ற தொகுதிகளுக்கு 14 டேபிள் அமைத்து ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். கவுண்டம்பாளையும் தொகுதிக்கு மட்டும் 20 டேபிள் அமைக்கப்படும். ஏனெனில் தமிழகத்தில் இந்த தொகுதி தான், அதிக ஓட்டு சாவடிகள் கொண்டதில 2வது இடத்தில் இருக்கிறது. 551 ஓட்டு சாவடிகள் இருப்பதால் கூடுதலாக 6 டேபிள் போடப்படும்.
ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் பணியில் இருப்பார்கள். இதன்படி, மாவட்ட அளவில் 177 மைக்ரோ அப்சர்வர்கள் கவுண்டிங் டேபிள் மேற்பார்வை செய்வார்கள். கவண்டிங் மேற்பார்வையாளர்கள் 177 பேர் கவுண்டிங் உதவியாளர்கள் 177 பேர் பணியில் இருப்பார்கள்.
தபால் ஓட்டுக்கள் 37 சுற்றுக்களில் எண்ணி முடிக்கப்படும் . ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு கோவையில் இன்று பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது .ஆனால் ஓட்டு எண்ணிக்கை விவகாரத்தில் பல்வேறு சிக்கல் இருக்கும் என்பதால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் சென்னைக்கு அவசர் பணியாக அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தமிழக தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பயிற்சி தரப்பட்டது.
இதில் இந்த தேர்தல் மிக முக்கியமானது. டிரண்டிங்கில் கணிக்க முடியாத பல்வேறு சிக்கல் நிறைந்த தேர்தலாக இருப்பதால் மிகுந்த கவனத்துடன் பணி செய்ய வேண்டும். தேர்தல் விதிகளை சரியாக கடை பிடிக்க வேண்டும். யாராவது விதிகளை மீறினால், தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் மாட்ட வேண்டியிருக்கும்.
சட்ட ரீதியான வழக்குகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் எனவே பணியில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ரவுண்ட்சும் 10 முதல் 15 நிமிட நேரத்தில் முடிக்க வேண்டும். தாமதம் செய்ய கூடாது. 2 மெசின் இருக்கும் தொகுதியில் சற்று தாமதம் இருக்கலாம். ரீ கவுண்டிங் உத்தரவின்றி செய்ய கூடாது.
மெசின் எண்ணிக்கையும், வாக்காளர்கள் எண்ணிக்கையும் சரியாக வித்தியாசமின்றி இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் சற்று எண்ணிக்கை நேற்று முடிவு செய்யப்பட்டது ஓட்டு மெசின்களை அந்த சுற்றுக்களில் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் 14 டேபிளில் 26 சுற்றுக்களும், சூலூரில் 28 சுற்றுக்களும், கவுண்டம்பாளையத்தில் 28 சுற்றுக்களும்,
கோவை வடக்கில் 25 சுற்றுக்களும், தொண்டாமுத்தூரில் 27 சுற்றுக்களும், கோவை தெற்கில 20 சுற்றுக்களும், சிங்காநல்லூரில் 26 சுற்றுக்களும், கிணத்துக்கடவில் 27 சுற்றுக்களும் பொள்ளாச்சியில் 20 சுற்றுக்களும், வால்பாறையில் 19 சுற்றுக்களும் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும்.
ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் கல்லூரி வளாகத்தை சுற்றிலும் டிரோன் என்ற ஆள் இல்லாத விமானம் பறக்க வரும் இரண்டாம் தேதி வரை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர். தடாகம் ரோடு சாய்பாபா காலனி ஜி சி டி வளாகம் மேட்டுப்பாளையம் ரோடு காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் பறக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
