‘ஓட்டுக்கு பணம்’ எதுக்கு கவுண்டிங் … கோவை கலெக்டர் அலுவலகத்தில் கருப்பு துணி கட்டி போராட்டம்
மறுமலர்ச்சி மக்களை இயக்கம் சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சிலர் முகத்தில் இன்று கருப்பு துணி கட்டி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது பணநாயக தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு கேலி கூத்து என்பதை வலியுறுத்தும் வகையில் கண் காது வாய் என மூன்று புலன்களையும் கருப்புத் துணியால் கட்டி போராட்டம் நடத்துகிறோம் என ஈஸ்வரன் தெரிவித்தார்.
தொடர்ந்து ஈஸ்வரன் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தேர்தல் என்பது ஓட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுக்கப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவிக்காமல் ஓட்டு எண்ணிக்கை நடத்தக்கூடாது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் அரசியல் கட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது .
இது தொடர்பாக நாங்கள் பட்டியல் போட்டு புகார் மனு அளித்தோம் . ஆனால் இந்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எனவே வரும் நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்துவது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என நாங்கள் கூறுகிறோம்.
அதிகாரம் மிக்க அரசியல் கட்சியுடன் தேர்தல் ஆணையமும் இணைந்து படுகொலை செய்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பது நடவடிக்கை எடுப்பது அடுத்த கட்டமான செயல் . ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவித்து பதிவு செய்ய வேண்டும் .
தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதாரண பொது மக்களை அச்சுறுத்தி அன்றாட செலவுக்கு கொண்டு சென்ற பணத்தை கைப்பற்றி மனு உளைச்சல் ஏற்படுத்தியது தேர்தல் ஆணையம். சிறு குழந்தைகளுக்கு கூட தெரிந்த உண்மை தேர்தல் ஆணையத்துக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி என்பது புரியவில்லை.
கோடிக்கணக்கான மக்களுக்கு தெரிந்த குற்றத்தை ஆதாரமில்லை என தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் எதற்கானது. அந்த ஆணையம் கலைக்கப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை ஏல ஆணையமாக மாற்றி அனைத்து தொகுதிகளுக்கும் ஏலம் விட்டு அந்த தொகையை மக்களுக்கு பிரித்து கொடுத்து விடலாம்.
பணம்தான் இந்தியாவின் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்தையும் நிர்ணயிக்கும் என்பது தொடர்ந்தால் இந்தியாவின் அழிவை யாராலும் தடுக்க இயலாது. வெளிநாடுகள் இந்தியாவில் அரசியல் கட்சிகளில் முதலீடு செய்து இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் அபாயம் எதிர்காலத்தில் ஏற்படும்.
தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழு பறக்கும் படையை கட்டுப்பாட்டு அறை என அனைத்தும் அடைத்து விடலாம். இதற்காக பணம் செலவழிப்பது முட்டாள்தனமானது .கேள்விக்கூத்தானது .எனவே தேர்தல் நடத்தி வாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவர்களை அறிவிப்பு என்பது மாபெரும் கேலிக்கூத்தாக மாறிவிடும்.
இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்க வேண்டும். நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓட்டுக்கு பணம் கொடுத்திருப்பது நிரூபிக்கப்பட்டு தேர்தல் ரத்து செய்ய வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
