பல்லடம் அருகே கார் லாரி விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி…!
சேலம் கடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் ( 37).
இவர் மனைவி மேனகா (35 ). இவர்களது மகள் கனிஷ்கா (17). மகன் சுர்ஜித் (12 ). மேனகாவின் சகோதரர் மகள் சினேகா (23). இவர்கள் ஐந்து பேரும் இன்று மதியம் காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் .
அப்போது வி ஜே நிறுவனம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அதிவேகமாக கட்டுப்பாட்டை இறந்து குரூஸர் கார் மீது மோதியது . இதில் காரில் இருந்த தனபால், மேனகா , சினேகா ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். கனிஷ்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சுர்ஜித் பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சரவணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் தனபால் தலை துண்டித்து மிக கோரமான முறையில் இறந்து விட்டார் . இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள பகுதியில் இந்த கோர விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சரக்கு வாகனங்கள் அதிக வேகமாக சென்று வருவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிகிறது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
