கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…
கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது.
டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு,
பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை வழங்கினர். இவற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என ஐந்து மண்டலங்களிலும் மற்றும் பிரதான அலுவலகத்திலும் என மொத்தம் 63 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் விரைவாக தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
