கோவையில் நின்ற லாரியில் ஆண் சடலம்
கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஒரு லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியது . இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த டிரைவர்கள் லாரி மீது ஏறி பார்த்தனர் . அப்போது அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் . லாரியில் கொலை செய்து சடலத்தை போட்டு சென்று விட்டார்களா அல்லது லாரி மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்த நபர் உடல்நல குறைவினால் இறந்து விட்டாரா,
தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். லாரி மீது ஆண் சடலம் கிடந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
