கோவையில் பார்சலில் போதை, வெடி பொருட்கள் சப்ளை ஆகிறதா… போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…!

கோவை மாநகர காவல் துறை சார்பாக, மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரியர் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பார்சல்கள் பெறப்படும் மற்றும் சேமிக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயமாக பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது 30 நாட்கள் பராமரிக்கப்பட வேண்டும். அதைப்போன்று தங்கள் பெறுப்படும் பார்சல்கள் மற்றும் டெலிவரி செய்யப்படும் பார்சல்களை சரியான முறையில் உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்படவேண்டும்.

பார்சல் அனுப்பும் மற்றும் பெறும் நபர்களின் முழுமையான அடையாள விவரங்கள் (KYC ஆவணங்களான ஆதார். வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, கைபேசி எண்) கட்டாயமாக பெறப்பட்டு பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும்.

நேரடியாக தொடர்ந்து பார்சல் கொண்டுவரும் நபர்கள் மற்றும் பெற வரும் நபர்களில் சந்தேகம் இருந்தால் உடனடியாக தெரிவிக்கவேண்டும். சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் போலி முகவரி தவறான கைபேசி எண் அல்லது சந்தேகமான நடத்தை கொண்ட நபர்கள் மற்றும் சுழற்சி முறையில் பார்சல் அனுப்ப மற்றும் பெற வரும் நபர்களைப்பற்றி தகவல் தெரிவிக்கவேண்டும்.

ஒரு சில நபர்கள் போதைப்பொருள் மற்றும் கடத்தல் பொருட்களை பார்சலில் தவறான முகவரி கொடுத்துவிட்டு, செல்போன் எண் மூலமாக பார்சலை நேரடியாக பெற்றுவருகிறார்கள். தொடர்ந்து இதுபோன்று செய்யும் நபர்களை கண்டறிந்து, இவற்றை தடுக்க அவர்களது முகவரியை உறுதி செய்து பார்சல் டெலிவரி செய்யப்படவேண்டும்.

தற்போது Stamp போன்ற வடிவங்களில் உள்ள பேப்பர்களில் பின்புறம் போதை வஸ்துகள் தடவுப்பட்டு அவற்றை நுகர்ந்தாலே போதை ஏறும் தன்மை உள்ளது. இது போன்ற பார்சல்களையும் கண்காணிக்கவேண்டும்.

Fake delivery scam, Parcel fraud Suroorg இணைய வழி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டவிரோத பொருட்கள் அனுப்பப்படுவதை தடுக்க நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

வெளிமாநிலங்களில் முக்கியமாக திரிபுரா, ஆந்திரா, ஒரிசா மற்றும் மத்திய பிரதேசங்களில் இருந்து வரும் பார்சல்களை கண்காணித்து போதை என்பதை வஸ்துகள் போன்ற கண்காணிக்கவேண்டும். பொருட்கள் வருகிறதா வெடிபொருட்கள் போதைப்பொருட்கள் சட்ட விரோத ஆயுதங்கள் அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள், லாட்டரி சீட்டு போன்றவை அனுப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பார்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள செல்போன் எண் உண்மையானதுதானா என்பதை உறுதி செய்து. அவற்றிற்கு கால் செய்து உறுதிப்படுத்திய பின்பு பார்சலை டெலிவரி செய்யப்படவேண்டும்.

தங்களது நிறுவனத்தில் உள் வரும் மற்றும் வெளியே செல்லும் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டி Scanner மூலம் ஆய்வு செய்து அனுப்பிவைக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இங்கு பணிபுரியும் மற்றும் படித்து வரும் நபர்களுக்கு வரும் பார்சல்களை கண்காணிக்க வேண்டும்.

பணியில் சேர்க்கப்படும் ஊழியர்களின் பின்னணி, முகவரி மற்றும் முன் பணிபுரிந்த இடங்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களின் முழுமையான அடையாள ஆவணங்கள் மற்றும் சொந்த ஊர் விவரங்கள் பெறப்பட வேண்டும். பார்சல் வாகனங்கள் மற்றும் டெலிவரி பணியாளர்கள் தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் தரவுத்தளமாக பராமரிக்கப்பட வேண்டும்.

பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வசிக்கும் இடங்களுக்கு டெலிவரி செய்யும் போது பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனம் அமைந்துள்ள சரக காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர்களது செல்போன் எண் பெற்று, ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் சந்தேக நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும். செல்போன் எண் 8190000100இல் தகவல் தெரிவிக்கலாம். போட்டோக்கள் அனுப்பலாம். தகவல் கொடுப்பவர் பெயர் இரகசியமாக வைக்கப்படும்.

மேலும், காவல் துறையுடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி. மாநகர பாதுகாப்பை உறுதிசெய்ய நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *