covai pocso case: குற்றவாளி மீது சிறையில் தாக்குதல்

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். ‌ இவருக்கு உதவியதாக மோகன்ராஜ் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். ‌ இவர்கள் இரண்டு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிறார் பாலியல் துன்புறுத்தல் (pocso) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


முன்னதாக விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்ல முயன்ற போது கார்த்திக் தப்ப முயன்று அவரது வலது கால் மற்றும் வலது கை முறிவு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் போக்சோ குற்றவாளிகளுக்கான தனி பிரிவில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கே இருந்த சக கைதிகள் இவரிடம் இன்று வாக்குவாதம் செய்துள்ளனர்.

அவர்கள் கார்த்திகை சரமாரியாக தாக்கினர் . சாப்பிடும் பிளைட் டம்ளர் மற்றும் பல்வேறு பொருட்களால் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. நான்கு பேர் அவரை கீழே தள்ளி தாக்கிக் கொண்டிருந்தபோது சிறை வார்டர்கள் ஓடி சென்று மீட்டனர்.

இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்சோ வழக்கு குற்றவாளி சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *