இன்ஸ்டாவில் அசிங்கமா போடுறாங்க… கோவை பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் புகார்…

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது.

அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் போலீஸ் விசாரணையின் போது தப்ப முயன்றார். அப்போது அவர் மாடியில் இருந்து கீழே குதித்த போது வலது கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

இதற்கிடையே இறந்த சிறுமியின் பெற்றோர் தொடர்பாக பல்வேறு சர்ச்சை எழுந்தது. தனக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் அனுமதியின்றி மகளின் சடலத்தை வாங்கி சென்ற தனது கணவர் தகனம் செய்து விட்டதாக தாய் புகார் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிறுமியின் தாய் மற்றும் அவரது சித்தி மகள் உள்ளிட்டோர் இன்று மாலை கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் மனு ஒன்று அழைத்தனர். இந்த மனுவில் தங்களைப் பற்றி இன்ஸ்டாகிராம் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

சித்தி மகள் உறவுமுறை இளம் பெண் குறித்து பல்வேறு தகவல்களை ஆட்சேபகரமாக ஆபாசமாக பதிவிட்டு வருகிறார்கள். அந்த பதிவுகளை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் கூறுகையில்,” நாங்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தோம். ஓரிருநாளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள். இது தொடர்பான விவரங்களை விரிவாக நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *